சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜை அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு 'ஷடாரண்யம்' எனப் பெயர். தமிழில் 'ஆற்காடு' என்பர்.
ஆதியில் அகஸ்தியர் பூஜித்த லிங்கம், காலப்போக்கில் மண்ணில் புதையுண்டது.
பகல் முழுவதும் புல் மேய்ந்துவிட்டு வரும் ஒரு பசு, தினமும் பால் கறக்காமல் இருப்பதை கண்டு, சந்தேகம் கொண்ட மேய்ப்பவன், அதன் நடவடிக்கைகளை மறைந்திருந்து கவனிக்கலானான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் நின்று, பாலைப் பொழிவதைப் பார்த்தான். பால் பொழிந்த இடத்தின் கீழுள்ள மணல் புற்றைத் தோண்டிப் பார்த்ததில், அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது.
தோண்டும் முயற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் லிங்கத்திலிருந்து ரத்தம் கசிந்தது என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதைப் பார்த்து பயந்து போன மேய்ப்பவன் அரசனிடம் கூற, அரசர் இவ்வாலயம் கட்டித் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தின் மீது காணப்படும் பள்ளம் ரத்தம் கசிந்த இடம் எனக் கூறுவர்.
இப்பகுதி முழுவதும் வன்னி மரங்கள் காடாக வளர்ந்திருந்தமையால், இவ்வூர் 'வன்னிவேடு' எனப் பெயர் கொண்டது.
ஷடாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று.
வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர்் குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி் நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர்் காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர்் வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர்் மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி் புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர்.
சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்ணியமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன.
இவைகளே ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் எனப்படும்.